சிறப்புக் கட்டுரைகள்

போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: 20 மாதங்களாக நீடித்த தடை முடிவுக்கு வந்தது + "||" + Boeing 737 MAX, subject of two air crash investigations, gets FAA nod to fly again

போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: 20 மாதங்களாக நீடித்த தடை முடிவுக்கு வந்தது

போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்:  20 மாதங்களாக  நீடித்த தடை முடிவுக்கு வந்தது
எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இதே ரக விமானம் இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்

எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இதே ரக விமானம் இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

இந்த இரண்டு மிகப்பெரிய விபத்துகளைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன. இதன் காரணமாக போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது. 

கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18 ம் தேதி இந்த விமானங்கள் அனைத்தும் (837) தரையிறக்கப்பட்டன. இதுவே அமெரிக்க விமான போக்குவரத்து வரலாற்றில் அதிக அளவிலான விமானங்களின் தரையிறக்கம் ஆகும். அதன்பின்னர் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

இந்நிலையில், 20 மாத இடைவெளிக்கு பிறகு போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களை மீண்டும் வர்த்தக ரீதியாக இயக்குவதற்கு, அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்து இன்று சான்றிதழ் வழங்கியுள்ளது.  விமானத்தின் புதுப்பிக்கப்பட்ட விமான கட்டுப்பாட்டு அமைப்பை முழுமையாக பரிசோதனை செய்ததாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் 2021 இரண்டாம் காலாண்டுக்கு பிறகே போயிங் 737 மேக்ஸ் விமான நிறுவனம் மீண்டும் பயணத்தை துவங்கும் எனக்கூறப்படுகிறது.

அமெரிக்கா அனுமதி அளித்துள்ள போதிலும் பிற நாட்டு விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையங்களும் அனுமதி அளித்தால் மட்டுமே உலகம் முழுவதும் தடையின்றி போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயங்க முடியும். உதாரணமாக இந்தியாவில், முன்சொன்ன நிறுவனத்தின் விமானங்களுக்கு இன்னும் பறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்க கடற்படை அதிகாரி தைவானுக்கு திடீர் பயணம்?
அமெரிக்க கடற்படை அதிகாரி, முன் அறிவிப்பு இன்றி தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சத்வீதம் குறைந்து உள்ளது என அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
5. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.