உலக செய்திகள்

கொரோனா சிகிச்சை ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்; உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல் + "||" + Do not use Remdecivir to treat corona; WHO instruction

கொரோனா சிகிச்சை ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்; உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

கொரோனா சிகிச்சை ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்; உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
ஸ்டாக்ஹோம்,

உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளின் சிகிச்சைக்கு பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  எனினும், தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டறியப்படவில்லை.  அதற்கான முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

எனினும், தொடக்க நிலை பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்து வகையை சேர்ந்த ஹைடிராக்சி குளோரோ குயின் பயன்படுத்தப்படுகிறது.

இதேபோன்று, வைரசால் மிதஅளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வரையறுக்கப்பட்ட அவசரகால பயன்பாட்டுக்காக ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்தி கொள்ள இந்தியாவில் அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று டாசிலிஜுமப் என்ற மருந்தும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கொரோனாவுக்கு எதிரான போரில் சிகிச்சை அளிக்க பல்வேறு மருந்துகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்கேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி தடுப்பு மருந்துகளான, விலை குறைந்த மற்றும் பாதுகாப்பு நிறைந்த இவர்மெக்டின் மருந்துகளும் கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.  உத்தர பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களும் கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையளிப்பதற்கு இந்த மருந்துகளை பயன்படுத்தி வந்தன.

இவற்றில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் என்ற வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவில் கடந்த மே மாதம் நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது.  இதன்பின் கடந்த அக்டோபரில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் இந்த மருந்துக்கு முழு ஒப்புதலை வழங்கியது.  இதன்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் இந்த மருந்துக்கு முழு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், இந்திய மருத்துவர்கள் அதனை உபயோகப்படுத்துவதற்கு முன் சோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினர்.  இந்தியாவில், மருத்துவமனையில் சேர்ந்து கொரோனா சிகிச்சை பெறும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஏற்ற சிகிச்சை முறையாக இந்த மருந்துகளை இந்திய மருத்துவர்கள் முழுமையாக ஏற்று கொள்ளவில்லை.

இந்நிலையில், கொரோனா நோயாளிகள் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டபோதிலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

ஏனெனில் இந்த மருந்துகள் நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கு எந்தவித முக்கிய விளைவையும் ஏற்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.  இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர்கள் அடங்கிய வழிகாட்டி வளர்ச்சி குழு கூறும்பொழுது, கொரோனா நோயாளிகளுக்கு சாதகம் அளிக்கும் வகையிலான முடிவுகளை தருகிறது என்பதற்கான சான்றுகள், தற்பொழுது உள்ள தரவுகளின் அடிப்படையில் எதுவும் இல்லை என தெரிவித்து உள்ளனர்.

ஒரு சில சிகிச்சைகளில், கடுமையாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தொடக்கத்தில் சில உறுதிகளை இந்த வகை மருந்துகள் வழங்கியிருந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.  இதனால், ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.  

இதற்கு முன்பு, உலகம் முழுவதும் நடந்த மருத்துவ பரிசோதனை முடிவில், போதிய பாதுகாப்பின்மை மற்றும் நோய் நிவாரணியாக இல்லாதது ஆகியவற்றால், இவர்மெக்டின் மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

பாபிப்ளூ பிராண்ட் பெயரில் விற்கப்படும் ‘பாவிபிரவிர்’ மாத்திரைகள் கொரோனா சிகிச்சைக்கு மிகுந்த பலன் அளிக்காது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.  இதனால் இவர்மெக்டின், பாபிப்ளூ வரிசையில் ரெம்டெசிவிர் மருந்துகளும் சேர்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
2. கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார்.
3. குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. கொரோனா சிகிச்சை: குணமடைந்த நடிகர் சூர்யா வீடு திரும்பினார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பினார்.
5. கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.