ஆசியாவில் லஞ்சம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்- கருத்துக்கணிப்பு தகவல்


ஆசியாவில்  லஞ்சம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்-  கருத்துக்கணிப்பு தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2020 4:14 PM GMT (Updated: 24 Nov 2020 4:14 PM GMT)

ஆசியாவில் ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது, அரசு மீதான நம்பிக்கையை இது சேதப்படுத்துகிறது, ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

சமீபத்திய டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள முடிவுகள் ஆசியா முழுவதும் ஊழலின் வடிவங்கள் மற்றும் மக்களின் விழிப்புணர்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 20,000 பங்கேற்பாளர்களில் 74 சதவிகிதத்தினர் தங்கள் நாட்டில் ஊழல் பற்றி நன்கு அறிந்திருந்தனர் மற்றும் அவர்களின் அரசு அமைப்புகலில்  உள்ள ஊழல் கூறுகளை ஒரு பெரிய பிரச்சினையாகக் குறிப்பிட்டு உள்ளனர்.

ஆசியாவிற்கான உலகளாவிய ஊழல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்  17 ஆசிய நாடுகளில் கிட்டத்தட்ட 20,000 பேரிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியாவில் மட்டும், 89 சதவீதம் பேர் அரசாங்க ஊழல் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்று கூறியுள்ளனர். கூடுதலாக, ஐந்து பேரில்  ஒருவர் பொது சேவைகளைப் பயன்படுத்த கடந்த 12 மாதங்களில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறி உள்ளனர்.

மூன்று பேரில்  ஒருவர் தங்கள் நாட்டின் நாடாளுமன்றங்களில்  பெரும்பான்மை அல்லது அனைத்து உறுப்பினர்களும் ஊழல் மிக்கவர்கள் என்று நம்பினர்.

தேர்தலைப் பொறுத்தவரை, ஏழு பேரில் ஒருவர் வாக்களிக்க  லஞ்சம் வழங்கியதாக கூறி உள்ளார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சாதாரண மக்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்று கணக்கெடுக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 62 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

லஞ்சம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, இந்தியாவில் 39 சதவீத பதிலளித்தவர்கள் கடந்த 12 மாதங்களில் பொது சேவைகளை அணுக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறி உள்ளனர்.

கம்போடியா 37 சதவீதமும், இந்தோனேசியா 30 சதவீதமும், தென் கொரியா 10 சதவீதமும், ஜப்பான் மற்றும் ஜப்பான், மாலத்தீவு 2 சதவீதமும் நெருக்கமாக உள்ளன.

கிட்டத்தட்ட 32 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் ஊழல் மிக்கவர்கள் என்றும், 30 சதவீதம் பேர் உள்ளாட்சி அதிகாரிகள் ஊழல் மிக்கவர்கள் என்றும் கூறியுள்ளனர். 26 சதவீதம் பேர் ஜனாதிபதிகள் அல்லது பிரதமர்கள் அலுவலக ஊழியர்கள் ஊழல் நிறைந்தவர்கள் என்றும், 14 சதவீதம் பேர் மட்டுமே மதத் தலைவர்கள் ஊழல் மிக்கவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த 12 மாதங்களில் ஊழல் நிலைகள் மாறிவிட்டனவா என்று கேட்கப்பட்டபோது, ​​47 சதவீதம் பேர் இது அதிகரித்துள்ளதாகக் கூறினர், 27 சதவீதம் பேர் குறைந்துவிட்டதாகக் கூறினர். 23 சதவீதம் பேர் இது மாறாமல் இருப்பதாகக் கூறினர்.

Next Story