ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி
x
தினத்தந்தி 20 Dec 2020 12:57 PM GMT (Updated: 20 Dec 2020 3:58 PM GMT)

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஸ்பின் காலே ஸ்கொயர் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Next Story