சிறப்புக் கட்டுரைகள்

சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா + "||" + South Africa To Pay $5.25 Per Dose For AstraZeneca Vaccine From India's SII

சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா

சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா
சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்து வருகிறது.
புதுடெல்லி,

உலகிலேயே மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள், சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணியை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது. அன்றைய தினம், பூடானுக்கு ஒன்றரை லட்சம் டோஸ் தடுப்பூசிகளும், மாலத்தீவுக்கு 1 லட்சம் தடுப்பூசிகளும் மானிய உதவியாக அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் வங்காளதேசத்துக்கும், நேபாளத்துக்கும் மானிய உதவியாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று மியான்மருக்கும், சிசெல்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மியான்மருக்கும், சிசெல்சுக்கும் தடுப்பூசிகள் சென்றடைந்ததை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், மியான்மர், சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானிய உதவியாக ஏற்கனவே தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தவுடன், இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கும் மானிய உதவியாக அனுப்பி வைக்கப்படும்.

சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.வர்த்தக நோக்கத்தில், பிரேசில், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு 22-ந் தேதி (நேற்று) அனுப்பி வைக்கப்பட்டன. தடுப்பூசி கேட்டு பாகிஸ்தானிடம் இருந்து கோரிக்கை வந்ததா என்று தெரியவில்லை. இந்தியாவின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்த படியே வெளிநாடுகளுக்கு படிப்படியாக தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும். இதற்காக இந்தியாவில் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்கிறது: உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. நிர்மலா சீதாராமன், மன்மோகன்சிங் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர் - கவர்னர்கள், முதல்-மந்திரிகளுக்கும் தடுப்பூசி
நிர்மலா சீதாராமன், மன்மோகன்சிங் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கவர்னர்களும், முதல்-மந்திரிகளும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
4. 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருப்புவனம் பகுதியில் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்
கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்