இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு :ஆக்ஸ்பம்'அறிக்கை


இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு :ஆக்ஸ்பம்அறிக்கை
x
தினத்தந்தி 25 Jan 2021 10:12 PM GMT (Updated: 26 Jan 2021 1:27 AM GMT)

இந்தியாவில், ஊரடங்கு காலத்தில், பெருங் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, பல மடங்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாவோஸ்,
.
பிரிட்டனை சேர்ந்த , 'ஆக்ஸ்பம்' அமைப்பு, ஊரடங்கால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், ”இந்தியாவில் ஊரடங்கு காலத்தில்  100 பெருங்கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில், 12 லட்சத்து, 97 ஆயிரத்து, 822 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இத்தொகையை, தலா, 94 ஆயிரம் ரூபாய் வீதம், 13.80 கோடி ஏழைகளுக்கு வழங்க முடியும்.

ஊரடங்கின் போது, முகேஷ் அம்பானி, ஒரு மணி நேரத்தில் 94 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்தியாவில் 24 சதவீதம் மக்களின் மாதாந்திர வருமானமே 3 ஆயிரம் என்ற நிலையில்தான் உள்ளது.  சர்வதேச அளவில் அதிகரித்த பணக்காரர்களின் சொத்து மதிப்பில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து, இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story