மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா


மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Jan 2021 12:51 AM GMT (Updated: 26 Jan 2021 1:44 AM GMT)

மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

மெக்சிகோ சிட்டி, 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.   இந்த இந்லையில்,  மெக்சிகோ அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.   

தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள  மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர், லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் முன்னேறுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

67 வயதான லோபஸ் ஒப்ரடோருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தபோதிலும், மாரடைப்புக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளப் போவதில்லை என ஏற்கனவே கூறிவந்தது நினைவுகூரத்தக்கது.


Next Story