ஸ்மார்ட்போனில் ஹோலோகிராம் தொழில்நுட்பம்


ஸ்மார்ட்போனில் ஹோலோகிராம் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 13 Feb 2021 3:18 PM GMT (Updated: 13 Feb 2021 3:18 PM GMT)

இதுவரை திரையில் நீங்கள் பார்த்து ரசித்த 3-டி காட்சிகளை ஸ்மார்ட் போன்களில் காணும் வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? உண்மையில் 3-டி காட்சிகளை ஸ்மார்ட் போன்களில் காணும் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

ஒளிப்படங்கள், வீடியோக்களை முப்பரிமாண முறையில் நிஜமான தோற்றம் போலக் காட்டும் தொழில்நுட்பம்தான் ஹோலோகிராம். இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் ஆஸ்திரேலியா, சீன விஞ்ஞானிகள் நானோ தொழில்நுட்பமாக ஸ்மார்ட் போன்களில் புகுத்தி யுள்ளனர். பொதுவாக இதுபோன்ற தொழில்நுட்பத்தைக் கணினி அல்லது திரையரங்குகளில் 3-டி கண்ணாடிகளை அணிந்து பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்மார்ட் போன்களில் முப்பரிமாணக் காட்சிகளை, 3-டி கண்ணாடிகள் இல்லாமலேயே பார்க்க முடியுமாம்.

வழக்கமாக திரைப்படம், பெரிய திரை காட்சிகளுக்காக உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் சற்றுப் பெரியதாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட் போன்களில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் தலை முடியைவிட ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்குமாம். இதன்மூலம் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் போனில் முப்பரிமாண காட்சிகளைப் பார்க்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்ல, வீட்டில் உள்ள கணினி, தொலைக்காட்சிகளிலும்கூடப் பயன்படுத்த முடியும். ரெட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த போன், வெகுவிரைவில் வெளியாக உள்ளது.

Next Story