சிறப்புக் கட்டுரைகள்

நிலக்கரி ஊழல் வழக்கு : சிபிஐ அதிகாரிகள் நாளை வரலாம்- அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா + "||" + Abhishek Banerjee’s wife Rujira asks CBI to question her at residence; request accepted

நிலக்கரி ஊழல் வழக்கு : சிபிஐ அதிகாரிகள் நாளை வரலாம்- அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா

நிலக்கரி ஊழல்  வழக்கு :  சிபிஐ அதிகாரிகள் நாளை வரலாம்- அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா
நிலக்கரித் திருட்டு வழக்கில் விசாரணைக்காகத் தனது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நாளை வரலாம் என அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பதிலளித்துள்ளார்.
கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்துக் கடத்தியதாக அனுப் லாலா என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன்  மருமகனான அபிசேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம் அனுப் லாலா லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ருஜிராவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இதற்குப் பதிலளித்துள்ள அவர், எந்தக் காரணத்துக்காகத் தன்னை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது எனத் தனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காகத் தன் வீட்டுக்கு வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.      

நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக  மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள டி.எம்.சி பாராளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜியின் மைத்துனர் மேனகா கம்பீரின் இல்லத்திற்கு மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) குழு சென்றது. மேனகா கம்பீர் அபிஷேக்கின் மனைவி ருஜிரா பானர்ஜியின் சகோதரி ஆவார்.  

தொடர்புடைய செய்திகள்

1. "வங்காளம் தனது சொந்த மகளை விரும்புகிறது" மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புதிய முழக்கம்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் வங்காளம் தனது சொந்த மகளை விரும்புகிறது என தனது புதிய முழக்கத்தை சனிக்கிழமை வெளியிட்டு உள்ளது.
2. அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: அவரைக் கொல்ல சதித்திட்டம் மம்தா பான்ர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்க ரெயில் நிலையத்தில் அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சதித்திட்டம் நிறைந்தது என மம்தா பான்ர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் - அமித்ஷா
மேற்குவங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
4. ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்கள் இங்கு எழுப்பாமல், பாகிஸ்தானிலா எழுப்ப முடியும் மம்தாவுக்கு அமித்ஷா கேள்வி
மம்தா பானர்ஜி‘ ஜெய் ஸ்ரீ ராம் ’கோஷத்தில் கோபப்படுகிறார், ஆனால் சட்டமன்றத் தேர்தல் முடிவடையும் நேரத்தில் அவரே அதை முழக்கமிடுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
5. விவசாயிகளைக் கொள்ளையடித்து அவர்கள் நிலங்களை பா.ஜனாதா எடுத்துக் கொள்ளும் - மம்தா பானர்ஜி தாக்கு
விவசாயிகளைக் கொள்ளையடித்து அவர்கள் நிலங்களை பா.ஜனாதா எடுத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு எதுவும் இல்லாமல் போகும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.