சிறப்புக் கட்டுரைகள்

புதுச்சேரி பின்னடைவுடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை சுருங்கியது + "||" + With Puducherry setback, Congress political footprint diminishes further

புதுச்சேரி பின்னடைவுடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை சுருங்கியது

புதுச்சேரி பின்னடைவுடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின்  எண்ணிக்கை சுருங்கியது
புதுச்சேரி பின்னடைவுடன் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை சுருங்கி உள்ளது.
புதுடெல்லி: 

புதுச்சேரி சட்டசபையில்  முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.  இதனை தொடர்ந்து காங்க்மிரஸ் அங்கு ஆட்சியை இழந்தது.  தென் மாநிலங்களில் புத்ச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது .

தற்போது இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின்  எண்ணிக்கை  சுருங்கி உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கார் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

இந்த 3 மாநிலங்கள் தவிர மராட்டிய மாநிலத்தில்   சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிரது. ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா  ஆளும்  கூட்டணியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் உள்ளது. இருப்பினும், இந்த இரண்டு மாநிலங்களிலும்  காங்கிரசிற்கு இஸ்ரீய பங்களிப்பே உள்ளது.

கடந்த வாரம் பஞ்சாபில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை தவிர்த்து, காங்கிரஸ் நீண்ட காலமாக தேர்தலில் தொடர்ந்து  சரிவை சந்தித்து வருகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரசின் தேர்தல் விதி சிறிய மாற்றங்களைக் கண்டது. கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் அதன் சக்தி மிக்க  தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்கு விலகிய பின்னர் அங்கு கட்சி அதிகாரத்தை இழந்தது.

டெல்லி சட்டசபை தேர்தலில் , 70 போட்டியாளர்களில் 67 பேர் டெபாசிட் இழந்தனர்.  

பல மூத்த தலைவர்கள் காங்கிரஸில்  மாற்றத்தை கோரி தலைமைக்கு  கடிதம் எழுதியதிலிருந்து கட்சி உள் கட்சி பூசலை அதிகம்  எதிர்கொண்டுள்ளது.

முன்னாள் தலைவர்களான  குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் அடங்கிய குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் தேர்தல் சரிவுக்கு  எதிராக எச்சரித்து வந்த போதிலும் பயனில்லை.

சோனியா பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதோடு, ராகுல் காந்தி தொடர்ந்து கட்சித் தலைவரின் பணியை ஏற்றுக்கொள்வதற்கும் முன்னணியில் இருந்து வழிநடத்துவதற்கும் தயக்கம் காட்டுகிறார்.

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஐந்து முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள்  நடைபெற்ற உள்ளன. இதனால் புதுச்சேரியில் ஏற்பட்ட ஆட்சி இழப்பும் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

தோற்கடிக்கப்பட்டு, மனச்சோர்வடைந்து உள்ள  காங்கிரஸ் இப்போது தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளாவில் வெற்றிகளை எதிர்பார்க்கிறது, அதன் தளத்தை விரிவுபடுத்த முயல்கிறது.

இந்த முறை கேரளாவில் கூட,  காங்கிரஸ் ஒரு கடினமான எதிர்ப்பை எதிர்கொள்கிறது.பாஜக தரப்பில்  மெட்ரோ மேன் ஸ்ரீதரனின் வருகை  கேரள தேர்தல் களத்தை சூடாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் பேரணி
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி சிலை அருகே கையில் பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.
3. கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு
புதுச்சேரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 22-ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 22-ம்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.