சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 ஸ்போர்ட் + "||" + BMW X3 Sport

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 ஸ்போர்ட்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 ஸ்போர்ட்
சொகுசு கார்கள் வரிசையில் முன்னிலை வகிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எக்ஸ் 3 மாடல்களில் மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3, எக்ஸ் டிரைவ் 30 ஐ, ஸ்போர்ட் எக்ஸ் என அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.56.50 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. இதில் 8.8 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகிய வசதிகள் உள்ளன. மேற்கூரை திறந்து மூடும் வகையிலானது. 18 அங்குல அலாய் சக்கரங்களைக் கொண்டது.

இதில் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 252 ஹெச்.பி. மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 6.2 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இது 1 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டது.