கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நீண்ட நாக்கு கொண்ட நாய்


கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நீண்ட நாக்கு கொண்ட நாய்
x
தினத்தந்தி 28 Feb 2021 10:51 AM GMT (Updated: 28 Feb 2021 10:51 AM GMT)

இந்த உலகில் கடவுளின் படைப்பில் ஒவ்வொன்றும் அதிசயமே. அவ்வாறான ஒன்றுதான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நீண்ட நாக்கு கொண்ட நாய்.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த இந்த நாய் உலகிலேயே மிக நீண்ட நாக்கைக் கொண்டது என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தெற்கு டகோட்டாவின் சியோஸ் பால்ஸ் பகுதியில் வளர்ந்து வரும் மோஷி ரிக்கெர்ட் என்ற இந்த நாய்க்கு எட்டு வயதாகிறது. இதன் நாக்கு 19 சென்டி மீட்டர் நீளம் உள்ளதாக கூறப்படுகிறது. கார்லா ரிக்கெட் என்ற பெண் இந்த நாயை வளர்த்து வருகிறார். ஒரு முறை வெளியில் பயணம் சென்றிருந்த போது இந்த நாயைக் கண்டெடுத்து வந்து கடந்த ஆறரை ஆண்டு களாக வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த நாய் பீனட்  பட்டரினை விரும்பி உண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story