வானவில்: பாஸ்பட் புரோ இயர்போன்


வானவில்: பாஸ்பட் புரோ இயர்போன்
x
தினத்தந்தி 28 Feb 2021 12:37 PM GMT (Updated: 28 Feb 2021 12:37 PM GMT)

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனமான பிட்ரோன் இரண்டு மாடல்களில் பாஸ்பட் விஸ்டா மற்றும் பாஸ்பட்ஸ் புரோ என்ற பெயர்களில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை இரண்டுமே 5.1 புளூடூத் இணைப்பு வசதி கொண்டவை. சார்ஜிங் செய்யும் வகையிலான பேட்டரியைக் கொண்ட அமைப்புடன் இவை வந்துள்ளன. நானோ மேல் பூச்சு கொண்டவை, இரைச்சலைத் தவிர்க்கும் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை.

இயர்போன் ஒவ்வொன்றிலும் 40 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி இருப்பதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேஸில் உள்ள பேட்டரி 20 மணி நேரத்துக்குத் தேவையான மின்சாரத்தை சேமித்து அளிக்கும் திறன் கொண்டது. கருப்பு, கிரே, நீலம், வெள்ளை நிறங்களில் வந்துள்ளது. விஸ்டா மாடல் விலை சுமார் ரூ.1,299. புரோ மாடல் விலை சுமார் ரூ.1,199.

Next Story