வானவில்: வயர்லெஸ் கீ போர்டு


வானவில்: வயர்லெஸ் கீ போர்டு
x
தினத்தந்தி 28 Feb 2021 12:45 PM GMT (Updated: 28 Feb 2021 12:45 PM GMT)

மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஐகியர் நிறுவனம் வயர்லெஸ் கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் ஐ-பேட், ஐ-போன் மற்றும் லேப்டாப், பர்சனல் கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றிலும் இணைத்து செயல்படுத்தும் வகையிலானது. இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய இந்த கீ போர்டின் விலை சுமார் ரூ.2,175. இதை இயக்குவதும் எளிது. இது பேட்டரி மூலம் செயல்படக்கூடியது.

ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இதை இணைத்து செயல்படுத்த முடியும். அதாவது ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் டுடன் இணைத்து செயல் படுத்தும் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., ஐ-பேட், விண்டோஸ், குரோம் உள்ளிட்ட இயங்குதளம் கொண்ட கருவிகளுடன் இதை இணைத்து செயல்படுத்தலாம். இதில் உள்ளீடாக 180 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் செயல்படக்கூடியது.

இதில் மைக்ரோ யு.எஸ்.பி. சாக்கெட் உள்ளது. இதை ஸ்மார்ட்போன் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். இதன் எடை 675 கிராம்.

Next Story