சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: மோட்டோரோலா இ7 ஸ்மார்ட்போன் + "||" + Vanavil: Motorola E7 smartphone

வானவில்: மோட்டோரோலா இ7 ஸ்மார்ட்போன்

வானவில்: மோட்டோரோலா இ7 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக இ7 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது 6.5 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 25 பிராசஸர் உள்ளது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் நினைவகத் திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதி கொண்டது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் வசதி உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் 
வசதியோடு வந்துள்ளது. நீலம், சிவப்பு உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில்: ஸ்பிரிங் 2 இயர்போன்
ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் 20 ஆண்டுகளுக்கும் அதிக அனுபவம் மிக்க பிக்யூஐஸ் ஆடியோ நிறுவனம் புதிதாக ஸ்பிரிங் 2 என்ற பெயரிலான இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
2. வானவில்: வயர்லெஸ் கீ போர்டு
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஐகியர் நிறுவனம் வயர்லெஸ் கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில்: பாஸ்பட் புரோ இயர்போன்
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனமான பிட்ரோன் இரண்டு மாடல்களில் பாஸ்பட் விஸ்டா மற்றும் பாஸ்பட்ஸ் புரோ என்ற பெயர்களில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.