வானவில்: சூரிய ஆற்றலில் இயங்கும் ஸ்மார்ட் கடிகாரம்


வானவில்: சூரிய ஆற்றலில் இயங்கும் ஸ்மார்ட் கடிகாரம்
x
தினத்தந்தி 1 March 2021 4:09 PM GMT (Updated: 1 March 2021 4:09 PM GMT)

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக இ7 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சூரிய ஆற்றலில் செயல்படும் ஸ்மார்ட் கடிகாரத்தை கார்மின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இதிலுள்ள பேட்டரி 65 நாட்கள் வரை செயல்பட வழியேற்பட்டுள்ளது. பிட்னெஸ் கண்காணிப்பு மற்றும் பயிற்சி, ஜி.பி.எஸ். இணைப்பு உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.58,300.

கார்மின் இணையதளம் மூலமும் இந்த கடிகாரத்தை பதிவு செய்து பெறலாம். கடிகாரத்தின் கண்ணாடி மீது சூரிய ஒளி படும்போது அதிலிருந்து மின்சாரத்தை தயாரித்து பேட்டரியில் சேமித்துக்கொள்ளும். ஜி.பி.எஸ். மற்றும் கலிலியோ இணைப்பு வசதி கொண்டது. ஸ்டீல் மேல்பாகம் கொண்ட மாடலின் எடை 72 கிராம். டைட்டானியம் மேல் பூச்சு உள்ள மாடலின் எடை 58 கிராம் வட்ட வடிவிலான கிரே ஸ்டிராப்புடன் இவை வந்துள்ளது.

Next Story