மூன்று மாயப் படிகள்


மூன்று மாயப் படிகள்
x
தினத்தந்தி 1 March 2021 5:20 PM GMT (Updated: 1 March 2021 5:20 PM GMT)

வாழ்த்துகள் என்ற வார்த்தைகள் முழுமையான விடுதலையை குறிக்கும் நிறைவை கொடுக்கும்.

முதல்படி: அமைதியாக அமருங்கள், உழலும் மனதின் சக்கரங்களை அமைதியாக்குங்கள். ஒரு தூக்க நிலையை அடையுங்கள். அடுத்த படிக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

2-வது படி: உங்கள் நினைவில் எளிதில் பாதிக்கப்பட கூடிய ஒரு வாசகத்தை எடுத்து கொள்ளுங்கள். அதை தாலாட்டு போல் மீண்டும், மீண்டும் சொல்லி கொண்டே இருங்கள். சாதாரண நிலை மற்றும் அமைதியான மனது இப்போது என்னுடையது. அதற்கு நான் நன்றி கூறுகிறேன். உங்கள் மனது அலைபாயாமல் இருக்க தெளிவான உச்சரிப்புடன் இந்த வார்த்தைகளை வாயசைத்து மனதில் படமாக்குங்கள். இது ஆழ்மனதில் நுழைவதை சுலபமாக்குகிறது. இதை 5 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் செய்யுங்கள். ஆழ்ந்த உணர்ச்சிபூர்வ பதிலை பெறுவீர்கள்.

3-வது படி: தூங்க செல்லும் முன்பு ஜோகன்வோன் கெத் என்ற ஜெர்மனி நாட்டை சேர்ந்த எழுத்தாளர் செய்ததை பயிற்சி செய்யுங்கள். ஒரு நண்பனையோ அல்லது அன்பானவர் ஒருவரையோ உங்கள் எதிரில் நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மூடப்பட்டு இருக்கிறது. நீங்கள் அமைதியாகவும், தளர்வாகவும் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் உங்களிடம் வாழ்த்துகள் என்கிறார். நீங்கள் அந்த புன்சிரிப்பை பார்க்கிறீர்கள். அந்த குரலை கேட்கிறீர்கள். மனதில் அந்த கைகளை தொடுவதை கற்பனை செய்கிறீர்கள். அனைத்தும் மிகவும் தெளிவாக நிஜமாக உள்ளது. வாழ்த்துகள் என்ற வார்த்தைகள் முழுமையான விடுதலையை குறிக்கும் நிறைவை கொடுக்கும். ஆழ்மனதின் பதிலை பெறும்வரை அதை மீண்டும், மீண்டும் கேளுங்கள்.

Next Story