சிறப்புக் கட்டுரைகள்

லெனோவா ஸ்மார்ட் கடிகாரம் + "||" + Lenovo Smart watch

லெனோவா ஸ்மார்ட் கடிகாரம்

லெனோவா ஸ்மார்ட் கடிகாரம்
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் லெனோவா நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் ஸ்மார்ட் கடிகாரமாக வந்துள்ள இது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. கூகுள் அசிஸ்டென்ட் மூலம் அதாவது குரல்வழி கட்டுப்பாடு மூலம் இதை செயல்படுத்த முடியும்.

இந்தியாவுக்கென தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் அலாரம் கடிகாரம், இந்தி மொழி பேசினாலும் அதற்கான உத்தரவை ஏற்று செயல்படும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் 4 அங்குல எல்.இ.டி. டிஸ்பிளே திரை உள்ளது. மைக்ரோபோன் மூலமும் இதை செயல்படுத்த முடியும். இதனால் அறைக்கு வெளியில் இருந்தாலும் மைக் மூலமான குரல்வழி கட்டுப்பாடுகளை இது கேட்டு செயல் படுத்தும்.

வீட்டில் உள்ள 6 பேரின் குரல்களை சரியாக கணித்து அதன்படி செயல்படும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 3 வாட் ஸ்பீக்கர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 512 எம்.பி. நினைவகம் உள்ளது. இதன் எடை 240 கிராம். இதன் விலை சுமார் ரூ.4,499.