சிறப்புக் கட்டுரைகள்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் + "||" + Redmi 9 Power Smartphone

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்
இரண்டு சிம் கார்டுகளைப் போடும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடையது.
ஜியோமி நிறுவனம் ரெட்மி 9 பவர் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.53 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் உள்ளது. மற்றொரு மாடல் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகத்துடன் அறிமுகமாகியுள்ளது.

இரண்டு சிம் கார்டுகளைப் போடும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடையது. இதில் 48 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமும், 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா முன்புறமும் உள்ளது. இதன் பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.12,999.

தொடர்புடைய செய்திகள்

1. ஒன் பிளஸ் 9 ஸ்மார்ட்போன்
பிரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன் பிளஸ் தற்போது 9 மாடலை அறிமுகம் செய்துள்ளது.