எல்.ஜி. டபிள்யூ 41 ஸ்மார்ட்போன்


எல்.ஜி. டபிள்யூ 41 ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 3 March 2021 4:31 PM GMT (Updated: 3 March 2021 4:31 PM GMT)

எல்.ஜி. நிறுவனம் டபிள்யூ 41 மற்றும் டபிள்யூ 41 பிளஸ் என்ற பெயரில் இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எல்.ஜி. நிறுவனம் டபிள்யூ 41 மற்றும் டபிள்யூ 41 பிளஸ் என்ற பெயரில் இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே 6.55 அங்குல தொடு திரையைக் கொண்டவை. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைக் கொண்டவையாகவும், 48 மெகா பிக்ஸெல் கேமராவை உள்ளடக்கிய தாகவும் இவை வெளிவந்துள்ளன. இவற்றில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் நினைவகத் திறனை விரிவாக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இவற்றில் இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. விரல் ரேகை உணர் சென்சார் திரையிலேயே உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.13,490, 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.14,990 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் டபிள்யூ 41 புரோ மாடல் விலை சுமார் ரூ.15,490.


Next Story