பி.எம்.டபிள்யூ. ஆர் 18 கிளாசிக்


பி.எம்.டபிள்யூ. ஆர் 18 கிளாசிக்
x
தினத்தந்தி 3 March 2021 5:04 PM GMT (Updated: 3 March 2021 5:04 PM GMT)

பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் ஆர் 18 கிளாசிக் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

எல்.இ.டி. முகப்பு விளக்கு, உயரமான விண்ட் ஸ்கிரீன், அகலமான டயர்கள் ஆகியன நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றதாக வந்துள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் பொருட்களை வைப் பதற்கான பைகள் வைக்க வசதியாக எக்ஸாஸ்ட் பைப் வடிவமைப்பு மாற்றப் பட்டுள்ளது. இது 1802 சி.சி. திறன் கொண்ட பாக்ஸர் டுவின் என்ஜினைக் கொண்டது.

இது 91 ஹெச்.பி. மற்றும் 158 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை வெளிப்படுத்தும். இதில் மூன்று விதமான ஓட்டும் நிலையைத் தேர்வு செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.24 லட்சம். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஆர் 18 பர்ஸ்ட் எடிஷன் மாடலை விட இதன் விலை ரூ.1.50 லட்சம் கூடுதலாகும்.

Next Story