சிறப்புக் கட்டுரைகள்

மேம்பட்ட அம்சங்களுடன் ஜொலிக்கும் டாடா சபாரி + "||" + Tata Safari that shines with advanced features

மேம்பட்ட அம்சங்களுடன் ஜொலிக்கும் டாடா சபாரி

மேம்பட்ட அம்சங்களுடன் ஜொலிக்கும் டாடா சபாரி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது சபாரி ரக மாடலாகும். இதில் மேம்பட்ட அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு புதுப் பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரீமியம் எஸ்.யு.வி. மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அழகிய தோற்றம், சொகுசான பயணத்தை உறுதி செய்யும் வகையில் உள்புற வடிவமைப்புடன் இது வெளிவந்துள்ளது. 6 பேர் மற்றும் 7 பேர் பயணிக்கும் வகையில் வந்துள்ள இந்த மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.14.69 லட்சம். சாகசத்தை விரும்புவோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் அதிக சக்தி வாய்ந்த 2 லிட்டர் டர்போ கைரோடெக் என்ஜின் உள்ளது. இதனுள் 8.8 அங்குல திரையைக் கொண்ட இன்போ டெயின்மென்ட் சிஸ்டம் பயணத்தை மேலும் இனிதாக்க உதவும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அனைத்து சக்கரங்களும் டிஸ்க் பிரேக் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் வசதி கொண்டதாக வந்துள்ளது. வெள்ளை நிற உள்புறம், சாம்பல் நிற டேஷ்போர்டு, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். வெள்ளை, கிரே, நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இது அறிமுகம் செய் யப்பட்டுள்ளது.