ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி.


ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி.
x
தினத்தந்தி 24 March 2021 4:25 PM GMT (Updated: 24 March 2021 4:25 PM GMT)

ஏ.எஸ்.யு.எஸ். தயாரிப்பாக ஆர்.ஓ.ஜி. ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகியுள்ளது.

விளையாட்டுப் பிரியர்களின் விருப்பமான மாடலாக இது வந்துள்ளது. 6.78 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் 18 ஜி.பி. ரேம் உள்ளது. ஸ்நாப்டிராகன் 888 எஸ்.ஓ.சி. பிராசஸர் இடம்பெற்றுள்ள முதலாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். இதன் பின்புறம் 64 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 24 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 65 வாட் திறன் கொண்ட சார்ஜருடன் வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் விலை சுமார் ரூ.49,999.

இதில் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.57,999. பேன்டம் பிளாக் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.69,999. இதில் 18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.79,999.

Next Story