விவோ எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 புரோ


விவோ எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 புரோ
x
தினத்தந்தி 7 April 2021 12:05 PM GMT (Updated: 7 April 2021 12:05 PM GMT)

விவோ நிறுவனம் எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 புரோ என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை 6.56 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 870 பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இவை வந்துள்ளன.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், பன்டச் 11.1 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. எக்ஸ் 60 மாடல் விலை சுமார் ரூ.37,990 ஆகவும், எக்ஸ் 60 புரோ மாடல் சுமார் ரூ.49,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story