சிறப்புக் கட்டுரைகள்

ஏ.பி.எஸ். வசதியோடு பஜாஜ் பிளாட்டினா 110 + "||" + ABS With convenience Bajaj Platinum 110

ஏ.பி.எஸ். வசதியோடு பஜாஜ் பிளாட்டினா 110

ஏ.பி.எஸ். வசதியோடு பஜாஜ் பிளாட்டினா 110
பஜாஜ் தயாரிப்புகளில் பிளாட்டினா மாடல் மோட்டார் சைக்கிள் மிகவும் பிரபலமானது.
இந்த மாடல் தற்போது ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி (ஏ.பி.எஸ்.) கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.65,926.

இந்தப் பிரிவில் இத்தகைய ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல் இதுவாகும். வாகனம் ஓட்டுபவரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இப்புதிய வசதி கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள மாடலின் விலையை விட ரூ.1,600 அதிகமாகும். இது 115.45 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர், பியூயல் இன்ஜெக்‌ஷன் நுட்பத்தைக் கொண்டது. கருப்பு, சிவப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.