சிறப்புக் கட்டுரைகள்

போக்ஸ்வேகனின் எஸ்.யு.வி. டி ராக் + "||" + Of Volkswagen SUV T Roc

போக்ஸ்வேகனின் எஸ்.யு.வி. டி ராக்

போக்ஸ்வேகனின் எஸ்.யு.வி. டி ராக்
போக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியச் சந்தையில் எஸ்.யு.வி. மாடல்களை களமிறக்கத் திட்டமிட்டு டி ராக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையாக விலை சுமார் ரூ.21.35 லட்சம். டர்போ சார்ஜ்டு இன்ஜெக்‌ஷன் அடிப்படையிலான என்ஜினைக் கொண்டுள்ளது. இதில் 2 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின், நான்கு சக்கர சுழற்சியோடு 7 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் 6 ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கிறது.

ஏ.பி.எஸ்., இ.எஸ்.சி., டயர் காற்றழுத்த கண்காணிப்பு வசதி, ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது. நடுத்தர பிரிவு எஸ்.யு.வி.யாக இது வந்துள்ளது. இரட்டை வண்ணத்திலான அலாய் சக்கரம் இதன் தோற்றப் பொலிவை மேலும் அழகாக்குகிறது.

இதில் 25.4 செ.மீ. அளவிலான தொடு திரை உள்ளது. ஓட்டுவதை மென்மையாக்க மிருதுவான தோல் உறையைக் கொண்டதாக ஸ்டீயரிங் சக்கரம் உள்ளது. இணைப்புக்கு வசதியாக மை போக்ஸ்வேகன் கனெக்ட் உள்ளது. வயர்லெஸ் செயலி இணைப்பு வசதி கொண்டது. ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்டது. டைப் சி யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட்கள் உள்ளன. ஆன்லைன் மூலமான முன்பதிவை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.