சிறப்புக் கட்டுரைகள்

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் + "||" + Pakistan's first transgender newsreader

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்
பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான கோஹினூர், திருநங்கை மார்வியா மாலிக்கை செய்தி வாசிப்பாளராக நியமித்துள்ளது.
பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் இவர். மூன்று மாதப் பயிற்சிக்குப் பிறகு கடந்த வாரம் பணியில் சேர்ந்தார். இதழியல் பட்டதாரியான மார்வியா, மாடலாகவும் பணியாற்றியுள்ளார். 

பல உலக நாடுகளை போன்றே பாகிஸ்தானிலும் திருநங்கை களின் வாழ்க்கை மோசமாகத்தான் கழிகிறது. தனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பணி திருநங்கையர் வாழ்வில் மேம்பாடு ஏற்படுத்துவதாக இருக்கும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மார்வியா மாலிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அமைச்சரவை, சமீபத்தில்தான் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை உள்பட 4 நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு பயணிகள் வர தடை
இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை உள்பட 4 நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
3. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
4. பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
5. 20 ஓவர் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.