ஆப்பிள் ‘ஸ்பிரிங் லோடட்’ நிகழ்ச்சி: ஏர் டேக்ஸ், புதிய ஐமேக், ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம்


ஆப்பிள்  ‘ஸ்பிரிங் லோடட்’ நிகழ்ச்சி: ஏர் டேக்ஸ், புதிய ஐமேக், ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம்
x
தினத்தந்தி 20 April 2021 11:43 PM GMT (Updated: 20 April 2021 11:43 PM GMT)

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தார்.  

குறிப்பாக ஆப்பிள் ஏர் டேக்ஸ் எனும் புது சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்களின் பொருட்கள் காணாமல் போனால் அவற்றை கண்டறியும் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆப்பிளின் மற்ற சாதனங்களை போன்றே பயனர் விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.   

இந்த டிராக்கர் அல்ட்ரா வைடுபேண்ட் தொழில்நுட்பம், பில்ட்-இன் ப்ளூடூத் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் பைண்ட் மை நெட்வொர்க் சேவையை கொண்டு பொருட்களை கண்டறிந்து கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஏர்டேக் விலை ரூ. 3,190 என்றும் நான்கு ஏர்டேக் வாங்கும் போது ரூ. 10,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

அதேபோல், ஆப்பிள் பாட்காஸ்ட் செயலி பற்றி புது தகவல்களை வெளியிட்டார். அதன்படி இந்த செயலி புது தோற்றம் பெற்று இருக்கிறது.  மேலும் புது யுஐ கொண்டிருக்கும் பாட்காஸ்ட் செயலியுடன் பாட்காஸ்ட் சந்தா எனும் புது சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பாட்காஸ்ட் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் ஆப்பிள் டிவி 4கே, யு1 சிப்செட் கொண்ட  ஏர்டேக் டிவைஸ் டிராக்கர், புதிய ஐமேக், ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை புதிதாக பர்பில் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதே நிகழ்வில் ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் ஆப்பிள் எம்1 பிராசஸர் கொண்டிருக்கின்றன.


Next Story