பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் அறிமுகம்


பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் அறிமுகம்
x

சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 6 சீரிஸ் மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை மறைமலை நகரில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் 630 ஐ எம் ஸ்போர்ட் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வேரியன்ட் பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாகவும், இரண்டு வேரியன்ட்கள் (630 டி எம் ஸ்போர்ட் மற்றும் 620 டி லக்ஸுரி லைன்) டீசலில் இயங்கும் என்ஜினைக் கொண்டவையாகவும் உள்ளன. புதிய அளவிலான உயரம், வடிவமைப்பு ஆகியன இதில் புதிய அளவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 630 ஐ எம் ஸ்போர்ட் மாடல் விலை சுமார் ரூ.67,90,000. பி.எம்.டபிள்யூ. 620 டி லக்ஸுரி லைன் விலை சுமார் ரூ.68,90,000. 630 டி எம் ஸ்போர்ட் மாடல் விலை சுமார் ரூ.77,90,000.

புதிய கண்கவர் வண்ணங்களில் இவை வந்துள்ளன. இவற்றுக்கான முன் பதிவு இம்மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் மற்றும் 40 ஆயிரம் கி.மீ. தூரம் முதல் 10 ஆண்டுகள் 2 லட்சம் கி.மீ. வரையிலான சேவையை அளிக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான சேவை கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ரூ.52 ஆயிரமாகும். இரண்டு பகுதிகளாக திறந்து மூடும் கண்ணாடியாலான மேற்கூரை, நான்கு வித கிளைமேட் கண்ட்ரோல் வசதி ஆகியன இதில் உள்ளன. இவை அனைத்துமே 2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜினைக் கொண்டவை.

இதனால் ஸ்டார்ட் செய்து 7.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். இவற்றில் 8 ஸ்பீட்ரானிக் ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன. குரூயிஸ் கண்ட்ரோல் பிரேக்கிங் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே வசதியோடு வயர்லெஸ் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. பார்க்கிங் அசிஸ்டென்ட், ரியல் வியூ கேமரா, ரிவர்ஸிங் அசிஸ்டென்ட், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன.

ஆட்டோ ஸ்டார்ட்- ஸ்டாப் வசதி, எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் ஆகியவற்றோடு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ். டைனமிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல்,  டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஐசோபிக்ஸ் இருக்கை வசதியும் இதில் உள்ளது.

Next Story