பஜாஜ் சி.டி. 110 எக்ஸ்


பஜாஜ் சி.டி. 110 எக்ஸ்
x
தினத்தந்தி 22 April 2021 12:02 PM GMT (Updated: 22 April 2021 12:02 PM GMT)

பஜாஜ் நிறுவனம் புதிதாக சி.டி. 110 எக்ஸ் என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.55,494. இது 115 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

இது 8.6 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 9.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். வட்ட வடிவிலான முகப்பு விளக்கு இதற்கு வித்தி யாசமான தோற்றத்தை அளிக்கிறது.

மிகவும் உறுதியான கிராஷ் கார்டு மற் றும் பின்புறம் பொருட்களை வைக்க வசதியாக கேரியர் உள்ளது. இது 7 கிலோ வரை எடை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு ள்ளது. பெட்ரோல் டேங்குடன் ஒட்டிய ரப்பர் பேட் மிகவும் வசதியாக இருக்கும். கண் கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது.

Next Story