பிலிப்ஸ் ஷேவர்


பிலிப்ஸ் ஷேவர்
x
தினத்தந்தி 22 April 2021 1:17 PM GMT (Updated: 22 April 2021 1:17 PM GMT)

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் பிலிப்ஸ் நிறுவனம் ஆண்களுக் கென பிரத்யேகமான ஷேவரை அறிமுகம் செய்துள்ளது.

எம்.ஜி. சீரிஸில் மொத்தம் நான்கு மாடல்கள் வந்துள்ளன. எம்.ஜி 3721, எம்.ஜி 3747, எம்.ஜி 5730, எம்.ஜி 5740 ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

தலை முதல் கால் வரை அனைத்து விதமான பணிகளையும் இவற்றின் மூலம் நிறைவேற்ற முடியும். சிகை அலங்காரம் மற்றும் ஷேவிங், வித விதமான கட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளை யும் நிறைவேற்றக் கூடியது. இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து ஒரு மணி நேரம் செயல்படக் கூடியது. கொரோனா தொற்று அச்சுறுத் தல் இருக்கும் சூழலில் வீட்டி லிருந்த படியே அழகாக முடியை திருத்திக் கொள்ள, ஷேவ் செய்ய இது மிகவும் உபயோகமானதாக வந்துள்ளது.

எம்.ஜி 3721 மாடல் விலை சுமார் ரூ.1,795. எம்.ஜி 3747 மாடல் விலை சுமார் ரூ.1,895. எம்.ஜி 5730 மாடல் விலை சுமார் ரூ.2,895. எம்.ஜி 5740 மாடல் விலை சுமார் ரூ.2,995

Next Story