சோனி பிராவியா எக்ஸ் 80.ஜே கூகுள் டி.வி.


சோனி பிராவியா எக்ஸ் 80.ஜே கூகுள் டி.வி.
x
தினத்தந்தி 22 April 2021 2:12 PM GMT (Updated: 22 April 2021 2:12 PM GMT)

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சோனி நிறுவனம் எக்ஸ் 80. ஜே கூகுள் டெலிவிஷனை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைக் கண்டுகளிக்கும் வகையில் புதிய ரக டி.வி.யை இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. கூகுள் டி.வி.யுடன் இணைந்து எக்ஸ் 80.ஜே மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது 4-கே அல்ட்ரா ஹெச்.டி., எல்.டி.இ. டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. இது 75 அங்குலம், 65 அங்குலம், 55 அங்குலம், 50 அங்குலம், 43 அங்குலம் அளவுகளில் வந்துள்ளது. கூகுள் டி.வி. இணைப்பு உள்ளதால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்க்கும் வசதி இதில் உள்ளது. இதில் உள்ளீடாக உள்ள மைக்ரோபோன் மூலம் குரல் வழி கட்டுப்பாடு மூலமாக இதை செயல்படுத்தலாம்.

Next Story