புதிய அம்சங்களுடன் போக்ஸ்வேகன் போலோ


புதிய அம்சங்களுடன் போக்ஸ்வேகன் போலோ
x
தினத்தந்தி 29 April 2021 11:09 AM GMT (Updated: 29 April 2021 11:09 AM GMT)

பிரபல மாடலான போலோ காரில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது பிரபல மாடலான போலோ காரில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்தக்காரின் 6-வது தலைமுறை மாடலான இது அளவில் பெரியதாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முகப்பு விளக்கு மற்றும் முன்புற கிரில் தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல பின்புற விளக்கு வடிவமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு இதன் தோற்றப் பொலிவு மேலும் அழகாக்கப் பட்டுள்ளது. இது சிறிய அளவிலான ஹைபிரிட் மாடலாகும்.

இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில் மாருதி பலெனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ-20, ஹோண்டா ஜாஸ் ஆகிய மாடலுக்கு இது போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Next Story