பஜாஜ் பல்சர் என்.எஸ் 125


பஜாஜ் பல்சர் என்.எஸ் 125
x
தினத்தந்தி 29 April 2021 1:31 PM GMT (Updated: 29 April 2021 1:31 PM GMT)

பஜாஜ் நிறுவனம் புதிதாக பல்சர் பிராண்டில் என்.எஸ் 125 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.93,690. இத்துடன் பல்சர் பிரிவில் மட்டும் 10 மாடல்கள் உள்ளன. இது 124.4 சி.சி. திறன் கொண்டது. 2 வால்வு, ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டது. இது 12 ஹெச்.பி. திறனையும், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. என்.எஸ் 160 மாடலை விட இதன் எடை 7 கிலோ குறைவாகும்.

இதில் பெரிமீட்டர் பிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் டெலஸ்கோப்பிக் போர்க் முன்புறமும், மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறமும் உள்ளது. முன்புறம் டிஸ்க் பிரேக்கும், பின்புறம் டிரம் பிரேக் வசதியும் கொண்டது. விரும்பினால் இரண்டு சக்கரங் களுக்கும் டிஸ்க் பிரேக் வசதியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 12 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டது. இரண்டு பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் தனித்தனி இருக்கை வசதி கொண்டது.


Next Story