சிறப்புக் கட்டுரைகள்

நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட் + "||" + The counting process for Nandigram has not been completed Tweets Trinamool Congress

நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்

நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்
நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.

இதற்கிடையில், நந்திகிராம் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பல கட்ட வாக்கு எண்னிக்கைக்கு பிறகும் தொடர்ந்து இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் மிகக்குறைவான அளவிலேயே உள்ளதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்துவிட்டதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் 6.35-க்கு வெளியிட்ட பதிவில், நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை. தயவுசெய்து எதையும் ஊகிக்க வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆங்கில செய்தி ஊடகமான ’இந்தியா டுடே’ நந்திகிராமில் 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள்
நந்திகிராம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகொள் விடுத்துள்ளது.
2. நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி
நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.
3. திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.
4. நந்திகிராம் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - மம்தா பானர்ஜி
நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
5. நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்.... பாஜக தோல்வியடைந்துவிட்டது - மம்தா பானர்ஜி பேச்சு
நாங்கள் 221-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டதாகவும், தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.