சிறப்புக் கட்டுரைகள்

உலகுக்கு ஒளி கொடுத்த விஞ்ஞானி + "||" + Who gave light to the world Scientist

உலகுக்கு ஒளி கொடுத்த விஞ்ஞானி

உலகுக்கு ஒளி கொடுத்த விஞ்ஞானி
புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஆவார். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவயதில் ரெயில் நிலையத்தில் செய்தித்தாள்களை விற்று வந்தார்.
பல விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகளை நமக்கு தந்து உள்ளனர். அவர்களில் சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். ரைட் சகோதரர்களும் அவ்வாய்ப்பையே மேற்கொண்டனர். அந்த வகையில் தாமஸ் ஆல்வா எடிசனும், புவிஈர்ப்பு விசைப்பற்றி ஆய்வை மேற்கொண்டார்.

இவர் ஒரு புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஆவார். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவயதில் ரெயில் நிலையத்தில் செய்தித்தாள்களை விற்று வந்தார். ஒரு நாள் செய்தித்தாள்களை விற்கும் போது தந்தி எந்திரங்களில் எவ்வாறு விவரங்களை பயன்படுத்துவது என்று அறிந்தார். அந்த வருடத்திலேயே மின்சார சம்பந்தப்பட்டவற்றை அறியத் தொடங்கினார்.

1876-ம் ஆண்டு மேன்டே பார்க், நியூ ஜெர்சி மற்றும் உலகம் முழுக்க இதற்காகச் சென்றார். அன்று முதல் “விசார்ட் ஆப் மேன்டே பார்க்” என்ற பட்டப்பெயரை பெற்றார். அதற்கு பின் 1878-ம் ஆண்டு போனா கிராப்பையும் ரெக்கார்ட் பிளேயரையும் கண்டுபிடித்தார்.

1879-ம் ஆண்டு இவர் கண்டுபிடித்த மின்சார பல்புதான் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பினால் அவர் மேலும் அதிக கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார். இன்று இந்த மின்சார பல்ப் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. மின்சார பல்ப் இல்லாத தெருக்களோ, சாலைகளோ இருக்க முடியாது. எடிசன் மட்டும் இந்த மின்சார பல்பை கண்டுபிடிக்கவில்லை என்றால் இன்றும் உலகம் இருளாகத்தான் இருந்து இருக்கும். எனவே இருளை அகற்றி வெளிச்சத்தை கண்டுபிடித்த பெருமை எடிசனையே சாரும்.

எடிசன் 100-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார். இவரின் அறிவாற்றல் வியக்கத்தக்க ஒன்றாகும். இவரின் கண்டுபிடிப்புகள் இன்றைய நாகரிக உலகில் ஒரு அங்கமாக விளங்குவது அவரின் அறிவாற்றலுக்கு கிடைத்த மிக பெரிய விருதாகும்.