ஜியோமி எம்.ஐ. 11 எக்ஸ்


ஜியோமி எம்.ஐ. 11 எக்ஸ்
x
தினத்தந்தி 5 May 2021 5:54 AM GMT (Updated: 5 May 2021 5:54 AM GMT)

ஜியோமி நிறுவனம் எம்.ஐ. 11 எக்ஸ் மற்றும் 11 எக்ஸ் புரோ என்ற இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை 6.67 அங்குல அமோலெட் திரையைக் கொண்டவை. இதில் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 11 எக்ஸ் மாடலில் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

புரோ மாடலில் 108 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆட்மோஸ் வசதியோடு வந்துள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4,520 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது 52 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

இவை 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்டவையாகவும், 128 ஜி.பி. நினைவக வசதி கொண்டதாகவும் வந்துள்ளன. முன்புறம் செல்பி பிரியர்களின் வசதிக்காக 20 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

எம்.ஐ. 11 எக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.29,999, புரோ மாடல் விலை சுமார் ரூ.39,999.

Next Story