ஹூயாவெய் செரெஸ் எஸ்.யு.வி. அறிமுகம்


ஹூயாவெய் செரெஸ் எஸ்.யு.வி. அறிமுகம்
x
தினத்தந்தி 6 May 2021 5:36 AM GMT (Updated: 6 May 2021 5:36 AM GMT)

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சீனாவைச் சேர்ந்த ஹூயாவெய் நிறுவனம், தற்போது செரெஸ் என்ற பெயரில் பேட்டரியில் செயல்படும் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

 இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 820 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இதில் உள்ள பேட்டரி 180 கி.மீ. தூரம் வரை செயல்படும். இது 4,700 மி.மீ. நீளம், 1,930 மி.மீ. அகலம், 1,625 மி.மீ. உயரம் உள்ளதாக வடிவமைக்கப்பட்டது. தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், திறந்து மூடும் வகையிலான மேற்கூரை கொண்டது.

இதில் 11 ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கியர் வசதியும் கொண்டது. மேலும் குறைந்த வேகத்தில் செல்லும் வசதியும் உள்ளது. அதேபோல மோதலைத் தவிர்க்கும் எச்சரிக்கை வசதி, அவசர கால பிரேக்கிங் வசதி உள்ளது.

இது 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட் ரோல் என்ஜின் கொண் டது. இதில் உள்ள பேட்டரிக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய 2 மின்மோட்டார்கள் உள்ளன. இது 551 ஹெச்.பி. திறனையும், 820 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்து 100 கி.மீ. வேகத்தை 4.68 விநாடிகளில் தொட்டுவிட முடியும்.

தொலைத் தொடர்புத் துறையில் சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் ஹூயாவெய் நிறுவனம் தற்போது ஆட்டோமொபைல் துறையில் நுழைந்து எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Next Story