ஏ.எஸ்.யு.எஸ். விவோ புக்புரோ 14 லேப்டாப்


ஏ.எஸ்.யு.எஸ். விவோ புக்புரோ 14 லேப்டாப்
x
தினத்தந்தி 12 May 2021 5:27 PM GMT (Updated: 12 May 2021 5:27 PM GMT)

ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் விவோபுக் புரோ 14 என்ற பெயரில் புதிய ரக லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஏ.எம்.டி. ரைஸன் 5000 சீரிஸ் பிராசஸர் உள்ளது. இது 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஓலெட் கலர் டிஸ்பிளே உள்ளது. இதில் ஹார்மன் கார்டோன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 15 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.52,500.

இதில் ஆர் 75800 ஹெச் சி.பி.யு. மாடல் விலை சுமார் ரூ.57,100. இதில் 14 அங்குல ஓலெட் ஹெச்.டி.ஆர். திரை உள்ளது. மேலும் ஏ.எம்.டி. ரைஸன் மற்றும் ஏ.எம்.டி. ரைஸன் 7 ஆகிய பிராசஸர்களைத் தேர்வு செய்யும் வசதி உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 56 வாட் பேட்டரி உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. எஸ்.டி. கார்டு ரீடர், ஹெட்போன், மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

Next Story