புதிய மெர்சிடஸ் மேபாஷ் எஸ்-கிளாஸ்


புதிய மெர்சிடஸ் மேபாஷ் எஸ்-கிளாஸ்
x
தினத்தந்தி 13 May 2021 1:20 PM GMT (Updated: 13 May 2021 1:20 PM GMT)

பிரீமியம் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மேபாஷ் எஸ்-கிளாஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது மேபாஷ் எஸ் 480 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இது இந்தப் பிரிவில் புதிய தலைமுறை மாடலாகும். இது 3 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 367 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது.

இதில் 9 ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன. நான்கு சக்கர சுழற்சி கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 5.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். 12.8 அங்குல டேப்லெட் அளவிலான இன்போடெயின்மென்ட் திரை உள்ளது. முப்பரிமாண இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே பின் இருக்கை பயணிகளுக்கு மிகச் சிறப்பான பொழுதுபோக்கை தரும். வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. 710 வாட் பர்மெஸ்டெர் சரவுண்ட் சிஸ்டம் மிகச் சிறந்த இசையை அளிக்கும். முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.

Next Story