கீரைகளும், சத்துக்களும்..!


கீரைகளும், சத்துக்களும்..!
x
தினத்தந்தி 15 May 2021 5:01 PM GMT (Updated: 15 May 2021 5:01 PM GMT)

காய்கறிகளில் கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

* முளைக்கீரையில் இரும்பு 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது.

* அகத்திக் கீரையில் கால்சியம் 1,130 மைக்ரோ கிராம், இரும்பு 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5,400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.

* பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. இரும்புச் சத்து, கால்சியம் குறைவு இவை யிரண்டுக்கும் பொன்னாங்கண்ணி கீரை மிகவும் ஏற்றது.

* பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன.

* வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2,340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன.

* புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

* முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6,780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.

Next Story