போட் ராக்கர்ஸ் 330 ஹெட்போன்


போட் ராக்கர்ஸ் 330 ஹெட்போன்
x
தினத்தந்தி 2 Jun 2021 11:59 AM GMT (Updated: 2 Jun 2021 11:59 AM GMT)

போட் நிறுவனம் ராக்கர்ஸ் 330 என்ற பெயரில் ஹெட்போனை நெக் பேண்டுடன் அறிமுகம் செய்துள்ளது.

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் போட் நிறுவனம் ராக்கர்ஸ் 330 என்ற பெயரில் ஹெட்போனை நெக் பேண்டுடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,299.

இதில் புளூடூத் வி 5.0 இணைப்பு வசதி உள்ளது. குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இது செயல்படும். காதில் பொருந்தும் வகையில் சிலிக்கான் மேல் பகுதி இருப்பதால் இது கச்சிதமாக பொருந்தும். உபயோகப் படுத்தாதபோது இரண்டும் ஒட்டிக் கொள்ளும் வகையில் காந்த சக்தி கொண்டது.

இதை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் செயல்படும். சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட் உள்ளது. கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என கண்கவர் நிறங்களில் வந்துள்ளது.


Next Story