சிறப்புக் கட்டுரைகள்

கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம்: எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை + "||" + Third Covid wave could be as severe as second, but deaths to be less: SBI report

கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம்: எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை

கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம்: எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை
கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம் என்று எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையில் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை 1 லட்சத்தை கடக்காத நிலையில், 2-வது அலையில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிரவைத்தது. இதனால், நாடு முழுவதும் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பின. 

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகளும் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். இந்த நிலைமை தற்போது மாறி மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு  2 லட்சத்திற்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்து இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், “கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது அலை 98 நாட்கள் சராசரியாக நீடித்துள்ளது. 2-வது அலை 108 நாட்கள் நீடித்திருந்தது. 

கொரோனா மூன்றாவது அலை 2-வது அலையை போலவே கடுமையானதாக இருக்கக் கூடும்.  எனினும், நாம் நன்றாக தயாராகி இருந்தால் தீவிர பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்து உயிரிழப்பு எண்ணிக்கை சரியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. 

கொரோனா 3-வது அலையின் போது, சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுவதை தீவிரம் ஆக்குவது ஆகியவற்றின் மூலம் , கொரோனா  தீவிரமாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிகையை 20 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடியும். அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் பெருமளவு குறைக்க முடியும் என்று எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
2. கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டதா? - நிபுணர்கள் பதில்
நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் பதிவானாலும், 2-வது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக உறுதிபடக் கூறமுடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
3. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு - ஐ.சி.எம்.ஆர் தகவல்
கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா 2-வது அலை: டெல்லியில் மட்டும் 103 மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
5. கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்க பரிசீலனை
கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.