கிராம்டன் சைலன்ட் புரோ


கிராம்டன் சைலன்ட் புரோ
x
தினத்தந்தி 3 Jun 2021 10:19 AM GMT (Updated: 3 Jun 2021 10:19 AM GMT)

வீட்டு உபயோக மின் சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமான கிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனம், ஸ்மார்ட் சீலிங் மின் விசிறியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுண்ணறிவு தொழில் நுட்பம் (ஐ.ஓ.டி.) கொண்டது. கூகுள் ஹோம், அலெக்ஸா உள்ளிட்டவற்றின் மூலம் இதை செயல்படுத்த முடியும். ஏரோ டைனமிக் வடிவமைப்பைக்கொண்டது. இதன் செயல்பாடு சப்தமில்லாத வகையில் இருப்பதற்காக ஆக்டிவ் பி.எல்.டி.சி. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மோட்டார் 42 வாட் திறன் கொண்டது. 90 வோல்ட் மற்றும் 300 வோல்ட் திறனில் இது செயல்படும். மொபைல் செயலி மூலமும் இதை இயக்கலாம்.

இதில் ஸ்லீப் மோட் என்ற நிலையை தேர்வு செய்தால் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் இதன் வேக செயல்பாடு தானாகவே மாறும். இதனால் இரவு உங்கள் தூக்கத்தை கெடுக்காத வகையில் சப்தமில்லாமல் இது செயல்படும். நேச்சுரல் பிரீஸ் மோட் என்ற நிலையை தேர்வு செய்தால் வேக நிலை 3 லிருந்து 5 வரை 30 விநாடிகளுக்கொருமுறை மாறி மாறி சுழலும். இது இயற்கையாக காற்று வீசுவதைப் போன்ற அனுபவத்தை அளிக்கும். ஸ்மார்ட்போன் மூலமான கட்டுப்பாடு மட்டுமின்றி இந்த பேனை ரிமோட் கண்ட்ரோல் மூலமும் கட்டுப்படுத்தலாம். வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் பேனின் விலை சுமார் ரூ.6,800.


Next Story