டெக்னோ ஸ்பார்க் 7 புரோ


டெக்னோ ஸ்பார்க் 7 புரோ
x
தினத்தந்தி 3 Jun 2021 11:56 AM GMT (Updated: 3 Jun 2021 11:56 AM GMT)

டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் 7 புரோ என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.6 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 48 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், 8 மெகா பிக்ஸெல் கேமரா முன்புறமும் உள்ளது.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 256 ஜி.பி. வரை மைக்ரோஎஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம். பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.9,999.

Next Story