தெற்கு ரெயில்வேயில் பயிற்சி பணி


தெற்கு ரெயில்வேயில் பயிற்சி பணி
x
தினத்தந்தி 5 Jun 2021 10:11 AM GMT (Updated: 5 Jun 2021 10:11 AM GMT)

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் அப்ரண்டீஸ் அடிப்படையில் பணி புரிவதற்கு 3378 பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை பெரம்பூரில் உள்ள கேரேஜ் ஒர்க்ஸ் பிரிவில் 936 பணி இடங்கள், திருச்சி பொன்மலையில் உள்ள மத்திய தொழிற்கூடங்களில் 756 பணி இடங்கள், கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ள சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கூடத்தில் 1686 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-வகுப்பு, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பிலும், ஐ.டி.ஐ. படிப்பிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-6-2021.


Next Story