தேநீர் வரலாறு


தேநீர் வரலாறு
x
தினத்தந்தி 5 Jun 2021 2:36 PM GMT (Updated: 5 Jun 2021 2:36 PM GMT)

தேயிலையின் தேவை அதிகரித்ததையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது.

நாடு சுதந்திரத்திற்கு பிறகு சர்வதேச அளவில் தேயிலையின் தேவை அதிகரித்ததையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது. மலைவாழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேயிலை அளித்து வருகிறது.

கி.மு 3-ம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் தேநீரை மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன. கி.மு.800-களில் தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானில் இருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு தேயிலை பரவியது.

17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தேநீர் மிக பிரபலமடைந்தது. இதன் பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். முதன் முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம் தேவான்

தேயிலையை பற்றி படிக்கக்கூடிய கலைக்கு டேசியோகிராபி என்று பெயர். சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் தேநீர் விழா நடத்தப்படுகிறது. மத விழாக்கள், திருமணம் போன்றவற்றின் போது தேநீர் விருந்து நடத்தப்படுகிறது. சீனர்கள் இதை `ஆர்ட் ஆப் டீ’ என்று அழைக்கிறார்கள்.

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் சீனாவின் பங்கு 36 சதவீதம், இந்தியாவின் பங்கு 22.6 சதவீதம், உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் நுகர்வு 25 சதவீதம். இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அசாம்.

அசாமில் 3,04,000 எக்டேரில் தேயிலை பயிரிடப்படுகிறது. அசாம் டீ என்பது உலகளவில் மிகவும் பிரபலம். இந்தியாவில் தேயிலை சந்தையின் மதிப்பு வருடத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய். இதில் கிரீன் டீ சந்தையின் மதிப்பு 250 கோடி ரூபாய்.

எகிப்தியர்கள் ஹைபிஸ்கஸ் என்று அழைக்கக்கூடிய செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயையே அருந்துகின்றனர். இதன் பெயர் கார்ஹடே.

உடல் எடையை குறைப்பதற்கு வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் கிரீன் டீயை விரும்புகிறார்கள். கிரீன் டீயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள், சீனா மற்றும் ஜப்பான்.

Next Story