சாம்சங் கேலக்ஸி புக் கோ லேப்டாப்


சாம்சங் கேலக்ஸி புக் கோ லேப்டாப்
x
தினத்தந்தி 9 Jun 2021 3:51 AM GMT (Updated: 9 Jun 2021 3:51 AM GMT)

சாம்சங் நிறுவனம் தனது பிரபலமான கேலக்ஸி வரிசையில் புதிய ரக லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

5-ம் தலைமுறை (5-ஜி) பிரிவைச் சேர்ந்ததாக கேலக்ஸி புக் கோ அமைந்துள்ளது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 7 சி பிராசஸர் உள்ளது. 5-ஜி அலைக்கற்றைக் கேற்ப இது உருவாக்கப்பட்டிருந்தாலும் 4-ஜி அலை வரிசையிலும் இது செயல்படும்.

இது 14 அங்குல முழு ஹெச்.டி. திரை, 42.3 வாட் பேட்டரி கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் செயல்படும். இது விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 25 வாட் சார்ஜரும் உள்ளது.

இதில் 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. மைக்ரோ கார்டு எஸ்.டி. மூலம் இதை விரிவாக்கம் செய்யலாம். விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மோஸ் வசதியுடன் வந்துள்ளது. இதன் விலை ரூ.25,480.

Next Story