சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள் வங்கியில் 10,710 பணி இடங்கள் கடற்படையில் வேலை + "||" + Employment News 10,710 jobs in the bank Working in the Navy

வேலைவாய்ப்பு செய்திகள் வங்கியில் 10,710 பணி இடங்கள் கடற்படையில் வேலை

வேலைவாய்ப்பு செய்திகள் வங்கியில் 10,710 பணி இடங்கள் கடற்படையில் வேலை
வங்கி தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ். நிறுவனம் சார்பில் பல்வேறு வங்கிகளில் உள்ள காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குரூப் ஏ, குரூப் பி பிரிவுகளில் சீனியர் மானேஜர், மானேஜர், உதவி மானேஜர், மார்க்கெட்டிங் ஆபீசர், அலுவலக உதவியாளர், வேளாண் அலுவலர் மற்றும் சட்டம், ஐ.டி. சி.ஏ. உள்ளிட்ட பதவிகளில் 10,710 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1-6-2021 அன்றைய தேதிப்படி சீனியர் மானேஜர் பதவிக்கு 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களும், மானேஜர் பதவிக்கு 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களும், உதவி மானேஜர் பதவிக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களும், அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வும் உண்டு. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்புடன் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும், பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பதவி சார்ந்த படிப்பிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-6-2021. மேலும் விரிவான விவரங்களை https://ibpsonline.ibps.in/rrbsoaxmay21/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு செய்திகள்: ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திய அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் திட்ட விஞ்ஞானி, திட்ட அறிவியல் உதவியாளர், அதிகாரி, நிர்வாக உதவியாளர் என 85 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2. வேலைவாய்ப்பு செய்திகள்: பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
பி.இ.சி.ஐ.எல் (BECIL) Broadcast Engineering Consultant India Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
3. வேலைவாய்ப்பு செய்திகள்; முதல் வணிக விமான பைலட்
கேரளாவின் முதல் வணிக விமான பைலட் என்ற பெருமையை 23 வயது ஜெனி ஜெரோம் பெற்றுள்ளார். ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கம் நிறைந்த விமான போக்குவரத்து துறையில், ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்று கூறப்பட்ட பணிகளை பெண்களும் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.