செல்பிக்கு ஒரு சிலை


செல்பிக்கு ஒரு சிலை
x
தினத்தந்தி 12 Jun 2021 11:15 AM GMT (Updated: 12 Jun 2021 11:15 AM GMT)

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் செல்பிக்கும் ஒரு சிலையும் வைத்துவிட்டார்கள்.

ஸ்மார்ட்போன் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் மொபைல் போன் வைத்திருப்போரில் செல்பி எடுக்காதவர்கள் என யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் செல்பி எடுக்கத் தோன்றியது. ஆனால் அதற்கு சிலை வடிக்க வேண்டுமென இங்கே யாருக்காவது தோன்றியதா? அமெரிக்கருக்கு அப்படியொரு எண்ணம் தோன்றி செல்பிக்குச் சிலையும் வைத்துவிட்டார்கள். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள நகரம் சுகர் லேண்ட்.

இந்த நகரத்தின் டவுண் ஹாலின் முன்னே வைக்கப்பட்டிருக்கும் சிலை ஒன்று அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இரண்டு பெண்கள் தங்களை செல்பி எடுத்துக்கொள்ளும் காட்சிதான் அங்கே சிலையாக வடிவம் பெற்றிருக்கிறது. சிலர் இந்தச் சிலை அமைத்ததை வரவேற்றிருக்கிறார்கள். சிலரது எரிச்சலையும் இந்தச் சிலை சம்பாதித்திருக்கிறது.

Next Story